அஞ்சுமன் நூலகத்தை தொடர்ந்து பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் பெருமக்களின் வரிசையில் இவ்வாண்டும் என்னற்ற அரசியல் பிரமுகர்கள் வருகை புரிந்து தங்கள் எண்ணங்களை குறிப்பேட்டில் வரைந்து சென்றனர். குறிப்பாக இன்று குவைத், அமீரகம், மலேசியா, அர்ஜென்டினா போன்ற இஸ்லாமிய நாடுகளைச் சார்ந்த பிரமுகர்கள் அஞ்சுமனுக்கு வருகை புரிந்தது உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதாய் அமைந்தது. இந்த சந்திப்பை சாத்தியப்படுத்திய சர்வதேச ஹலால் நிறுவனத்தின் இயக்குனர் முஹம்மது ஜின்னா அவர்களுக்கு…
Read More
வட்டியில்லா வங்கிமுறை புதுவை – கோட்டக்குப்பம் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட வேண்டும் என அஞ்சுமன் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு இன்று இதன் அறிமுகக் கூட்டம் சிறந்த முறையில் கூனிமேடு சீவா அமைப்புடன் சேர்ந்து நடத்தப்பட்டது. ஜன்சேவா கூட்டுறவு நிறுவனத்தின் இயக்குநர்கள் ஜனாப் அத்தீக்குர் ரஹ்மான், ஜனாப் இப்னு சவுத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பார்வையாளர்களுக்கு விளக்கமும் அளித்தனர். இறைவன் நாடினால் இந்த வங்கிமுறைஇப்பகுதியில் விரைவில் செயல்படும்.
ராவுத்தன்குப்பம் ஹெச்.ஆர்.சி சுகாதார மையத்திலிருந்து மருத்துவர் குழு வந்து இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்தி மருந்துகள் வழங்கினார்கள்.