தமிழகத்திலேயே முதல் முறையாக 132 உறுப்பினர்களுடன் ஜமியத்துல் உலமா சபை அஞ்சுமனில் கூடி தமிழகக் கிளையைத் துவக்கினர். இச்சபை பின்னர் தமிழகம் தழுவிய அளவில் ஜமாஅத்துல் உலமா சபையுடன் இணைந்தது. வட்டார ஜமாஅத்துல் உலமா சபை அஞ்சுமன் கட்டிடத்திலேயே இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
அகில இந்திய முஸ்லிம் மாதர் முன்னேற்றக் கழகத்தின் மாநாடு நடைபபற்றது. மாநாட்டினை கழகத்தலைவர் ஜனாபா ஜைனப் பேகம், செயலர் ஜனாபா கமருன்னிசா மற்றும் திருக்குறள் ஜனாப் அப்துல் கபூர் ஆகியோர் மாநாட்டைச் சிறப்பித்தனர்.
கோட்டக்குப்பத்தில் அரசு கிராம வைத்தியசாலை அமைந்திட அஞ்சுமன் சார்பில் பணிகள் துவங்கி இன்று மேற்படி இலவச மருத்துவ வசதி கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு கே,பி,கே. மேனன் அவர்களால் அஞ்சுமனில் ஆரம்பிக்கப்பட்டு 1968 வரை தொடர்ந்து நடைபெற்றது. நிர்வாகச் சிக்கல்களை காரணங்காட்டி நிறுத்தப்பட்ட அரசு மருத்துவ சேவை இன்றளவும் இப்பகுதியினை எட்ட வில்லை.
புதிய நூலகக் கட்டிடம் சென்னை புதுக்கல்லூரி முதல்வர் சையத் அப்துல் வஹாப் புகாரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அஞ்சுமணில் மதரஸா ஆரம்பிக்கப்பட்டது. காலையில் மாணவர்களுக்கான மார்கக் கல்வியும் மாலையில் ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டன. இதே ஆண்டு (1961) மின்சாரவசதி கோட்டகுப்பம் வந்தடைந்தது. இதற்கான முயற்சியில் 1940 முதல் அஞ்சுமன் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோது இரண்டாம் உலகப்போர் மூண்டதால் முட்டுக்கட்டை ஏற்பட்டது. மீண்டும் இதற்கான பணியை முழுமூச்சுடன் முன்னெடுத்துக் காரியம் காட்டியது அஞ்சுமன் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் லால்பக்கீர் சாஹிப் அவர்கள்.
அரசு கிராம வைத்தியசாலை பல்வேறு பிரச்சினைகளால் செயலிழக்க துவங்க, அஞ்சுமன் சார்பாக இலவச மருத்துவ நிலையம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு வெங்கடசுப்ப ரெட்டியார் திறந்து வைக்க, திருமுடி சேதுராமசெட்டியார் வாழ்த்துரை வழங்கினார். இந்த மருத்துவமனையில் டாக்டர் சி.ஜே. வியாஸ் நீண்டகாலம் சேவைபுரிந்தார். 1978 முதல் ஆழ்கடலில் முஸ்லிம் வ்ல்லியியிபமு படகாகத் தடுமாறிய அஞ்சுமனின் 15 ஆண்டுகால கோமா நிலைக்குச் சென்றது.
செயலற்று இருந்த அஞ்சுமன் நிர்வாகத்தை ஏழு நபர் கொண்ட பொறுப்புக்குழு வசம் அஞ்சுமனின் வாழ்நாள் உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்துல் உலமா சபையினர் ஒப்படைத்தனர்.
ஏறத்தாழ பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அஞ்சுமன் நூலகம் மீள் திறக்கப்பட்டது. தற்போதைய தலைவர் மருத்துவர் எல்.எம். ஷரீப் மற்றும் சமீபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த காஜி ஜைனுல் ஆபிதீன் உள்ளிட்டோர் அஞ்சுமனுக்குப் புத்துயிரூட்டி புதுப்பொலிவு கூட்டிப் புனரமைத்தனர். ஜாமிஆ ரப்பானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மெளலானா முஹம்மது சுல்தான் தேவ்பந்தி நிகழ்வில் உரையாற்றினார்.
கோட்டக்குப்பம் ரியாத் ஜமாஅத் சார்பாக தொடங்கப்படும் தையல் பயிற்சிப் பள்ளியின் துவக்கவிழா அஞ்சுமனில் இன்று நடைபெற்றது.
முஸ்லிம் மாணவர் மன்றத்தின் ஆலோசனைக் கூட்டம் அஞ்சுமனில் நடைபெற்றது.
சின்னகோட்டக்குப்பம் மஸ்ஜிதே பிலாலிய்யா மதரஸாவிற்கு அஞ்சுமன் சார்பாக கிதாபுகள் வழங்கப்பட்டன.
இன்று நடைபெற்ற பொறுப்புக்குழு கூட்டத்தில் 10.11.1993 அன்று காலஞ்சென்ற பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இளைஞர் மாணவர் மன்றத்தின் சார்பாக பாபர் மஸ்ஜித் நினைவு தினத்தை யொட்டி விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இளைஞர் மாணவர் மன்றத்தின் சார்பாக ஹோமியோபதி மருத்துவ முகாம் டாக்டர் இக்பால் அஹமது குழுவினரால் சிறப்பாக நடத்தப்பட்டது. 362 நபர்கள் பயன்பெற்றனர்.
இளைஞர் மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் காஜியார் புக் டிப்போவின் புத்தக கண்காட்சி இரு தினங்கள் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டது.