இஸ்லாம் மற்றும் தத்துவத்தின் ஒற்றுமை: முஹம்மது கஸ்ஸாலி மற்றும் டேல் கார்னகியின் பார்வை
உங்கள் உள்ளங்களிலுள்ள அழுக்குகளை நீங்கள் நீக்கிவிட்டால் யாரும் போதிக்காமலேயே அவற்றில் இறைத்தூதர்களின் போதனைகளை நீங்கள் காண்பீர்கள் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே சரி எது, தவறு எது என்று பிரித்து அறியும் பக்குவம் மனித உள்ளத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கிய வழிகாட்டல். மனிதனைப் படைத்த இறைவன்தான் அந்த வழிகாட்டலை மனிதனுக்கு தந்துள்ளான் எனும்போது அது மனிதனின் இயல்புகளோடு முற்றிலும் ஒத்துப்போகக்கூடியதாகத்தான் இருக்கும். அவனுடைய மனதில் காணப்படும் இயல்பான பிரித்தறியும் தன்மைக்கும் […]